மாநில வுஷு சாம்பியன்ஷிப் சென்னை கிளப் அணி அசத்தல்
சென்னை: மாநில வுஷு சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை பி.பி.சி., அகாடமி வீரர் - வீராங்கனையர், இரண்டு தங்க பதக்கங்கள் உட்பட ஆறு பதக்கங்கள் கைப்பற்றி அசத்தினர்.
தமிழ்நாடு வுஷு சங்கம், விநாயகா மிஷன் இணைந்து மாநில அளவில் இருபாலருக்குமான வுஷு சாம்பியன்ஷிப் போட்டியை, பூந்தமல்லியில் உள்ள விநாயகா மிஷன் வளாகத்தில் நடத்தின. இதில், பல மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
சென்னை சார்பில் பி.பி.சி., அகாடமியின் வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இறுதிப் போட்டிகள் நேற்று முன்தினம் மாலை நடந்த நிலையில், சென்னை வீரர் - வீராங்கனையர் இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கங்கள் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
இதன் ஆடவர் பிரிவில் உமர் ஒரு வெள்ளிப் பதக்கமும், ஆகாஷ் ஒரு வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். பெண்கள் பிரிவில் நிவேதா, சாய் சுனிதா தலா ஒரு தங்கப் பதக்கமும், ஹீமா மற்றும் சில்பா தலா ஒரு வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
மேலும்
-
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு
-
மனு கொடுக்க மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்: தனிப்பிரிவு செயல்பாடுகளை ஆய்வு செய்வாரா முதல்வர்?
-
நகராட்சி பூங்காவில் தனி அறை: திமுக கவுன்சிலர், ஆதரவு கும்பல் அடாவடிக்கு போலீஸ் சப்போர்ட்
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் வெளியீடு
-
மாயமான 3 மாணவர்களை ஊட்டியில் கண்டுபிடித்த போலீஸ்
-
பாய்லர் வெடித்து சாய ஆலையில் தீ விபத்து