நெம்மாரா இரட்டை கொலை வழக்கு: வரும் 15ல் தண்டனை அறிவிப்பு

​பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், நெம்மாரா போத்துண்டி போயன் நகரை சேர்ந்தவர் செந்தாமரை, 56. இவர், கடந்த 2025 ஜனவரியில், முன்விரோதம் காரணமாக, அப்பகுதியை சேர்ந்த சுதாகரன், 56, அவரது தாய் லட்சுமி, 75, ஆகியோரை கொலை செய்தார்.

செந்தாமரை ஏற்கனவே, சுதாகரனின் மனைவி சஜிதாவை, கடந்த 2019ல் கொலை செய்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர். அந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவர், இந்த இரட்டைக் கொலையை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு, நேற்று பாலக்காடு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதி கென்னத்து ஜார்ஜ், குற்றம் சாட்டப்பட்ட செந்தாமரை குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும், தண்டனை விவரங்கள் வரும் 15ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தீர்ப்பை அறிவிக்கும் முன் செந்தாமரையிடம், ஏதேனும் கூற விரும்புகிறாரா என்று நீதிபதி கேட்டார். அதற்கு, 'என்னை துாக்கிலிட்டு கொள்ளுங்கள்' என கூறினார்.

Advertisement