மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

கோயில் * கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

* ஆனி திருவிழா பால்குடம் எடுத்தல்: உச்சி மாகாளியம்மன் கோயில், மேலுார், காலை 8:00 மணி.



பக்தி சொற்பொழிவு * வாலி மோட்சம் - கம்பராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - திருச்சி கல்யாணராமன், மஹா பெரியவர் கோயில், வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, கூடல்நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.

* ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* எளிமையின் சிகரம் சிவானந்தர்: நிகழ்த்துபவர் -- சண்முக. ஞானசம்பந்தன், தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி, முன்னிலை: இந்தியன் வங்கி மண்டல தலைமை மேலாளர் மேகலை, சண்முகநாத ஓதுவார் குழுவினரின் திருமுறை இசை, மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

* பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* விவேகசூடாமணி: நிகழ்த்துபவர் - திண்டுக்கல் நித்ய சத்வானந்த சுவாமிகள், வேதானந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி முதல்.

* விருந்தும், மருந்தும் சொற்பொழிவு: திருவள்ளுவர் மன்றம், 9, பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, நிகழ்த்துபவர் -- திருக்குறள் வளர்ச்சிப் பட்டறை நிறுவனர் விஸ்வநாததாசன், மாலை 4:30 மணி.



பள்ளி, கல்லுாரி * உலகளாவிய தொழில் வாழ்க்கை பாதைக்கான தொடர்பியலில் தேர்ச்சி பெறுதல் - முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி: யாதவா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, முன்னிலை: தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், சிறப்பு விருந்தினர்: ஓட்டல் பார்க் பிளாசா குழும சேர்மன் கே.பி.எஸ்.கண்ணன், உஸ்பெகிஸ்தான் கல்வி அமைச்சக ஆங்கில ஆசிரியர் மோசஸ், ஏற்பாடு: ஆங்கிலத்துறை, ஷேக்ஸ்பியர் இலக்கிய சங்கம், காலை 10:00 மணி.

* கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கம்: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், தலைப்பு: கல்வி- முன்னேற்றத்தின் திறவுகோல், சிறப்பு விருந்தினர்: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முன்னாள் வணிகவியல் துறைத்தலைவர் ஜெயக்கொடி, ஏற்பாடு: அகத்தர உறுதி மையம், காலை 11:40 மணி.



மருத்துவம் * உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* நிறுவனர் டாக்டர் மனோரமா பிறந்த மாதத்தை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதிக்கான மருத்துவ முகாம்: சுமதி கருத்தரித்தல் மையம், சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.



கண்காட்சி * அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

* கோ-ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயற்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெங்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

* மான்சரோவர் - ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
பொது * மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்: மாநகராட்சி அலுவலகம், மதுரை, தலைமை: துணை மேயர் நாகராஜன், கமிஷனர் கவுரவ் குமார், காலை 10:30 மணி.

* ஹிந்தி மொழி சான்றிதழ் பயிற்சி வகுப்பு: ராகவ் நிகேதன், கூடல் நகர் 4வது தெரு, மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.



//





Advertisement