ஆடிக்காக சந்தையில் குவிந்த ஆடுகள்
ஆண்டிபட்டி:ஆடிப் பண்டிகைக்காக ஆண்டிபட்டி வார சந்தையில் 500க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் விற்பனைக்கு வந்தன. மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள், வியாபாரிகள் சந்தையில் ஆடுகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
ஒவ்வொரு திங்கட்கிழமை கூடும் ஆண்டிபட்டி வாரச்சந்தையில் காலையில் ஆடுகள் விற்பனை முக்கிய இடம் பிடிக்கும். தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளுடன் அதிகாலையிலேயே வாகனங்களில் வந்து விடுவர். காலை 6:00 மணிக்கு துவங்கும் ஆட்டு சந்தை 9:00 மணிக்கு முடிந்து விடும். வரும் வெள்ளிக்கிழமை ஆடி பண்டிகை துவங்க இருப்பதால் ஆடுகளுக்கான தேவை அதிகம் இருக்கும். இந்த வாய்ப்பை வியாபாரிகள் பயன்படுத்தி கொள்வர். நேற்று ஆண்டிபட்டி வார சந்தையில் 500க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. ஆடுகளின் எடையை கணக்கில் கொண்டு வியாபாரிகள் ஆடுகள் விலையை நிர்ணயம் செய்தனர். ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் விலையில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆடுகள் தேவையால் நேற்று சந்தைக்கு கொண்டு வரப்பட்ட வந்த ஆடுகள் கிராக்கியுடன் விற்பனை செய்யப்பட்டன.
மேலும்
-
மனு கொடுக்க மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்: தனிப்பிரிவு செயல்பாடுகளை ஆய்வு செய்வாரா முதல்வர்?
-
நகராட்சி பூங்காவில் தனி அறை: திமுக கவுன்சிலர், ஆதரவு கும்பல் அடாவடிக்கு போலீஸ் சப்போர்ட்
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் வெளியீடு
-
மாயமான 3 மாணவர்களை ஊட்டியில் கண்டுபிடித்த போலீஸ்
-
பாய்லர் வெடித்து சாய ஆலையில் தீ விபத்து
-
போதை இல்லா சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி