தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது 6 பைக்குகள் பறிமுதல்
நெய்வேலி ஜூலை 15–: நெய்வேலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்ட நால்வரை டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 5 ல் வசித்து வருபவர் அங்கையற்கண்ணன் மகன் சங்கர் கணேஷ். 39; இவர் என்.எல்.சி.,யில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 7ம் தேதி சங்கர் கணேஷ் அவரது வீட்டில் இருந்த பைக் காணாமல் போனது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் அதிகரித்ததால் டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான சப் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் உள்ளிட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று நெய்வேலி வானதிராயபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில், 2 பைக்குகளில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள், காடாம்புலியூர் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் மகன் கனகவேல் 22; அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் நவீன்குமார் 21; நந்தகோபால் மகன் அர்ஜுன் 21; மற்றும் கடலுார் புதுப்பாளையத்தை சேர்ந்த மெரஷா மகன் அன்சாரி 27; என்பதும், நெய்வேலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. மேலும் திருடிய பைக்குகளின் பாகங்களை பிரித்தெடுத்து கடலுாரில் உள்ள உதிரிபாகம் விற்கும் கடையில் விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து நால்வரையும் கைது செய்த டவுன்ஷிப் போலீசார் அவர்களிடமிருந்த 6 பைக்குகள் மற்றும் வாகனங்களின் உதரி பாகங்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
பெண்கள் பள்ளி இல்லாத திருப்பாசேத்தி
-
வேம்பத்துாரில் முறிந்த மின்கம்பம் அச்சத்தில் பொது மக்கள்
-
திருப்புத்துாரில் ஆவின் பால் தட்டுப்பாடு
-
காசியை மாற்றியமைக்க கங்கை, வருணா வழித்தடங்கள்; ரூ.25,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
-
அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார கண்காணிப்பு குழுவில் இந்தியர்கள் மூவர்!
-
பழநி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி; சிபிசிஐடி விசாரணை தீவிரம்