ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் ஜூலை 11 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 240 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று முன்தினம், விடுமுறை தினம் என்பதால் தங்கம்,வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.


நேற்று (ஜூலை 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13,200 ரூபாய்க்கும், வெள்ளி விலை மாற்றம் இன்றி, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




@quote@கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும் https://www.dinamalar.com/news/business-commodityquote

தினமலர் நேரலை



ஆபரண தங்கத்தின் விலை குறித்த செய்தி தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனைக் காண

https://www.youtube.com/watch?v=td0zdbKwJKc

Advertisement