சாலையோரத்தில் கொட்டும் கட்டட கழிவுகள் ஆற்றில் கலப்பதால் விலங்குகளுக்கு ஆபத்து

குன்னுார்: குன்னுாரில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆற்று பகுதியில் கொட்டும் மண் மற்றும் கட்டட கழிவுகளை தடுக்க, வலியுறுத்தப்பட்டுள்ளது.

குன்னுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், எரியூட்டு மையம், சுடுகாடு அருகே உள்ள ஆற்றோர பகுதிகளில், கட்டுமான கழிவுகள் கொட்டப்படுகிறது. மலைபோல் குவிந்துள்ள இந்த கழிவுகள் சாலையோரம் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

தன்னார்வலர் முபாரக் கூறுகையில்,‘‘குன்னுார்– - ஊட்டி பிரதான சாலையில், ஏற்கனவே மண் கொட்டப்பட்டு வந்ததை அதிகாரிகள் தடுக்கவில்லை. தற்போது, இரும்பு கம்பிகளுடன் கூடிய கட்டட கழிவுகளை கொட்டுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கீழ் பகுதியில் உள்ள ஆற்று நீர் மாசுபடுவதோடு, இந்த தண்ணீரை அருந்தும் வனவிலங்குகள் பாதிக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Advertisement