சூரியகார் திட்ட விழிப்புணர்வு கூட்டம்
திண்டுக்கல், ஜூலை 16-
திண்டுக்கல் மாவட்டத்தில் வீடுகளில் சூரிய ஒளி மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு சூரிய கார் திட்டத்தை மானிய உதவியுடன் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.இதன் மூலம் ஒருமுனை மின் இணைப்பு உள்ள வீடுகளுக்கு 1 முதல் அதிகபட்சம் 4 கி.வா. வரைக்கும், மும்முனை இணைப்பு உள்ள வீடுகளில் அதிகபட்சம் 10 கி.வா. வரைக்கும் எந்தவித முன் அனுமதியும் இன்றி மாடியில் சூரிய ஒளித்தகடு பொருத்தி மின் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
சோலார் பேனல் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் மின் பகிர்மான மீட்டரிலேயே இணைப்பு செய்து மின் கட்டணத்தை குறைத்துக் கொள்ளலாம். இதனால் அரசு வழங்கும் இலவச மின்சாரத் திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
இந்நிலையில் திட்டம் தொடர்பான பொதுமக்கள் சந்தேகம், விழிப்புணர்வு விளக்கக் கூட்டம் திண்டுக்கல், வத்தலகுண்டு உள்பட 5 இடங்களில் நடக்கிறது. அதன்படி நாளை (ஜூலை 17) காலை 10:00 மணிக்கு திண்டுக்கல் ஆர்.எம்.,காலனி ஈ.வி.ஆர்.சாலை சமுதாயக்கூடம், வத்தலகுண்டு பொது மருத்துவமனைக்கு எதிரில் உள்ள பாலு மஹால் என இரண்டு இடங்களில் நடக்கிறது.ஜூலை 22ல் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகம், வேடசந்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது. ஜூலை 24ல் பழநி ராஜாஜி சாலையில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடக்கிறது.
மேலும்
-
ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.98 லட்சம் மோசடி தமிழக தம்பதிக்கு போலீசார் வலை
-
பாக்ஸ் சுகாதாரத்துறை செயலர்அதிரடி மாற்றம் புதுச்சேரியில், கடந்தாண்டு இறுதியில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.200 கோடி அளவிற்கு போலிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த விவகாரம் அடங்குவதற்குள், கடந்த 13ம் தேதி புதுச்ச
-
அரசு சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
-
மஸ்ட் தடுப்பணை உயரத்தை குறைக்க அதிகாரிகள் மறுப்பு: விவசாயிகள் தர்ணா
-
குழாய் உடைந்து பல்லாக்குழியான ரோடால் வாகன ஓட்டிகள் தவிப்பு
-
மூலிகையில் அழகு சாதன பொருட்கள் தயாரித்தல் பயிற்சி