பழுதான அரசு பஸ் மாணவர்கள் அவதி
கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனை அருகே சாலையில் பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ்சால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலுார் துாக்கணாம்பாக்கம் பகுதியில் இருந்து, நேற்று காலை அரசு டவுன் பஸ் ஒன்று, கடலுார் நோக்கி வந்து கொண்டிருந்தது. அரசு மருத்துவமனை அருகே வந்தபோது திடீரென நடுரோட்டில் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு நின்றது.
அதனால் கடலுார்–பண்ருட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேறுவழியின்றி பஸ்சில் பயணம் செய்த மாணவர்கள், பயணிகள் இறங்கி அரசு பஸ்சை தள்ளிக்கொண்டு சாலையோரம் நிறுத்தினர்.
பஸ் டிரைவர் எவ்வளவோ முயற்சி செய்தும் பஸ்சை எடுக்க முடியவில்லை. அதனால் காத்திருந்த மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு நேரமாகி விட்டதால் வேறு பஸ் மற்றும் ஆட்டோ பிடித்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனிதநேயம் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்; முதல்வர் விஜய்
-
தங்கம் சவரனுக்கு ரூ.400, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் சீர்குலைக்க முயற்சி; துணை அதிபர் ஜேடி வான்ஸ் பகீர் குற்றச்சாட்டு
-
கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி படம் பார்க்க போறீங்களா; 30 நிமிடம் முன்னதாக போகணும்!
-
அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது வான்வழி தாக்குதல்; 7 பேர் உயிரிழப்பு
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 13 பேர் கைது; நாடு கடத்தும் பணி தீவிரம்
Advertisement
Advertisement