காலம் வரும் போது அமைச்சரவையில் பங்கு; சொல்கிறது இந்திய கம்யூ.,
சென்னை: எங்கள் காலம் வரும் போது, நாங்கள் அமைச்சரவையில் இடம் பெறுவோம் என இந்திய கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்திய கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன் கூறியதாவது: சிறை மரணங்கள் எந்த ஆட்சியில் நடந்தாலும் கண்டிக்கத்தக்கது. த.வெ.க.,வுக்கான ஆதரவு தொடரும். தவெ.க., அரசு நல்லது செய்தால் பாராட்டுவோம்; தவறு செய்தால் சுட்டிக் காட்டுவோம். ஆட்சி மாறுவதை விட, கட்சி மாறுவதை விட அடிப்படையில் சமூகம் மாற வேண்டும். எங்கள் காலம் வரும் போது, நாங்கள் அமைச்சரவையில் இடம் பெறுவோம்.
தனியார்மயம் எளிய மக்களுக்கு தீங்கானது. பொதுத்துறையை பாதுகாக்க வேண்டும். என்.எல்.சி., பங்குகளை விற்கக்கூடாது. அவ்வாறு விற்றால், அதை தமிழக அரசு வாங்க வேண்டும்.
துாய்மை பணியாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். ஒப்பந்த துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். பட்டா இல்லாத மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஒடுக்கப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நடைபயண இயக்கத்தை நடத்தியுள்ளோம்.
வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பில், மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு வீரபாண்டியன் கூறினார்.
மேலும்
-
ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.98 லட்சம் மோசடி தமிழக தம்பதிக்கு போலீசார் வலை
-
பாக்ஸ் சுகாதாரத்துறை செயலர்அதிரடி மாற்றம் புதுச்சேரியில், கடந்தாண்டு இறுதியில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.200 கோடி அளவிற்கு போலிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த விவகாரம் அடங்குவதற்குள், கடந்த 13ம் தேதி புதுச்ச
-
அரசு சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
-
மஸ்ட் தடுப்பணை உயரத்தை குறைக்க அதிகாரிகள் மறுப்பு: விவசாயிகள் தர்ணா
-
குழாய் உடைந்து பல்லாக்குழியான ரோடால் வாகன ஓட்டிகள் தவிப்பு
-
மூலிகையில் அழகு சாதன பொருட்கள் தயாரித்தல் பயிற்சி