பட்டாளம்மன் கோயில் திருவிழா
ஒட்டன்சத்திரம், ஜூலை 16-
ஒட்டன்சத்திரம் அருகே கே.அத்திக்கோம்பை பட்டாளம்மன் கோயில் திருவிழா சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து புனித தீர்த்தக்கலசங்கள் ஊர்வலமாக பட்டாளம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது.
நேற்று கங்கையிலிருந்து கரகம் பாலித்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்தும், பக்தர்கள் அலகு குத்தியும், பூச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆக்கிரமிப்புகளால் நீர்வரத்தை இழந்த குட்டாணி குளம்
-
விபத்தில் இறந்த வாலிபர் கண்கள் தானம்
-
தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதால்...
-
'கொடை'யில் துவங்கியது கொட்டாம் பழ சீசன்
-
21 வழக்கில் மட்டும் ஆஜரானவருக்கு அரசு வக்கீல் பதவி?
-
மாவட்டத்தில் பயிர் கடன் பெற தகுதியானவர்கள் 14,504 பேர்: கூட்டுறவுத்துறையினர் அரசுக்கு பரிந்துரை
Advertisement
Advertisement