கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் விளையாட்டு மைதானம் தேவை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகரில் விளையாட்டு மைதானம் அமைக்க இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொழுதுபோக்கு அம்சத்திற்கு என்று சொல்லும் அளவில் இடம் எதுவும் கிடையாது. தனியாக விளையாட்டு திடலும் இல்லை. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் மட்டுமே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கிரிக்கெட், இறகு பந்து, வாலிபால், கால்பந்து போன்ற பல்வேறு போட்டிகளில் விளையாடுவதற்கு வசதியாக உள்ளது. கோடை விடுமுறை நாட்களில் மாவட்ட, மாநில அளவிலான கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட போட்டிகளுக்கு, விளையாட்டு ஆர்வலர்கள் அனுமதி பெற்று, பள்ளி மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா, குடியரசு தின விழாக்களும் பள்ளி மைதானத்தில் நடத்தப்படுகிறது. கடும் கட்டுபாடுகளுக்கு இடையே காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே பள்ளியின் விளையாட்டு மைதானத்தை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். முறையான மைதானம் இன்றி விளையாட்டு ஆர்வலர்கள், நடைபயிற்சி செல்வோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
வீரசோழபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டு வருகிறது. இது கள்ளக்குறிச்சி நகரில் இருந்து 9 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சி நகரை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை.
எனவே, கள்ளக்குறிச்சி நகரிலேயே இடம் தேர்வு செய்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் முறையாக பயிற்சி பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
பெண்கள் பள்ளி இல்லாத திருப்பாசேத்தி
-
வேம்பத்துாரில் முறிந்த மின்கம்பம் அச்சத்தில் பொது மக்கள்
-
திருப்புத்துாரில் ஆவின் பால் தட்டுப்பாடு
-
காசியை மாற்றியமைக்க கங்கை, வருணா வழித்தடங்கள்; ரூ.25,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
-
அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார கண்காணிப்பு குழுவில் இந்தியர்கள் மூவர்!
-
பழநி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி; சிபிசிஐடி விசாரணை தீவிரம்