மனிதநேயம் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்; முதல்வர் விஜய்
சென்னை: மனிதநேயம் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்குவோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தியாகிகள் தினத்தையொட்டி, சமூக வலைதளத்தில் முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு எனது வீரவணக்கங்கள்.
ஆங்கிலேயரின் அதிகாரச் செருக்கை வேரறுக்கும் வகையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் பறந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றிய மாவீரர் தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், நமது மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என்ற பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத் தொடர் உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனார், 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கத்தை சுதந்திரப் போராட்டத்திற்கு அளித்து, இந்திய விடுதலைக்காக சர்வதேச ஆதரவைத் திரட்டிய, வீரத்தியாகி செண்பகராமன் ஆகியோரின் அயராத உழைப்பும் தன்னலமற்ற தியாகமும் என்றென்றும் போற்றத்தக்கது.
இத்தகைய தியாகிகளின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
மனித நேயமா. ..எப்படி. ..நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிய சென்னையில் ஒருவரை ரெண்டு பேர லாக்கப்புல அடிச்சு கொன்ன மாதிரியா இல்ல பத்திரிக்கையாளர் இரவு சித்திரை செய்தது மாதிரியா
நீங்கள் மனிதநேயம் கொண்ட புதிய சமுதாயம் எத்தகைய சமுதாயம் உருவாக்குவீர்கள் என்பதுதான் மூத்த பத்திரிக்கையாளர் விஜயனை உங்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரும் காவல்துறை நடத்திய விதத்திலேயே தெரிந்து விட்டதே?
மனிதநேயம் தேடி ஒரு அம்மா இரண்டு குழந்தைகள் கோர்ட்டில்
சிலிண்டர் ஆட்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு தியாகம், தேசபக்தி பற்றிப் பேசுவது சிரிப்பு.
மனித நேயம் செத்து பல வருடமாகிவிட்டது
அய்யா நீங்கள் கூட்டு வைத்திருக்கிறீர்களே அந்த அமைதி மார்க்க ஆளுங்களை- ""மனித நேயத்தோடு மற்ற மதத்தில் உள்ளவர்களை மனிதராக பாப்போம், அவர்களை காபிர்கள் என்று பழி வாங்க மாட்டோம் , வாழு, வாழ விடு என்ற கொள்கையை கண்டிப்பாக கடைப்பிடிப்போம் இந்த மனித நேய panbinai avargalukku
katru thaarungal paarppom.
அரசியலுக்கு வரும் : தலைவன்
தனி மனித ஒழுக்கம் இருக்கனும்
ஊதாரணம் .M.G.R
அதை முதலில் செய்யுங்கள். உங்களை குறை சொல்பவன் தி.திராவிடர்களின் கைக்கூலிகள். அதற்காக தி.திருமா, சிறுபான்மைரையும் நம்பிடாதீங்க. எல்லோரும் தி.திராவிடத்தில் இருந்து பிறந்தவர்கள், கொள்ளையர்கள், ....
ஊருக்கு உபதேசம் செய்வது மிகவும் எளிது, எவரா இருந்தாலும் முதலில் தன்னிடத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். நா பொதுவா சொல்கிறேன்.
மனித நேயமாம் .....அரசாங்கத்திற்கு எதிராக அவதூறாக யாராவது பதிவு செய்தால் அவர்கள் மேல் வழக்கு போடட்டும் ..அவதூறு என்று கோர்ட்டில் நிரூபிக்கட்டும் ..அதை விட்டு கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பெயர் மனித நேயமா?? .....இந்த லாட்டரி ஆட்சி நடப்பதே எதிர் கட்சி சின்னத்தில் நின்று ஜெயித்தவனை காசு பணம் கொடுத்து விலைக்கு வாங்கிதான் ....அது நினைவில் இருக்க வேண்டும் ....அ தி மு க காரன் ஐடி விங்கே அத்தி பூத்தாற் போல என்றோ ஒரு நாள்தான் தான் வேலை செய்யும் ... அதையும் கைது பண்ணி முடிச்சு விட்டாங்க...ஆட்சியில் இருக்கிறோம் என்று ரொம்பவும் ஆட்டம் வேண்டாம் ....