அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது வான்வழி தாக்குதல்; 7 பேர் உயிரிழப்பு

2


டெஹ்ரான்: ஈரானின் பாலங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய பெரும் தாக்குதல்களால் வெடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான ஒரு மாதத்திற்குப் பிறகு, முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மீதான சண்டை மீண்டும் மூண்டது.

ஈரான் ராணுவத் திறன்களை மேலும் சீர்குலைக்கும் நோக்கில், புதிய தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய படை தலைமையகம் அறிவித்தது. இது அமெரிக்கப் படைகள் நடத்தும் தொடர்ச்சியான ஆறாவது இரவுத் தாக்குதல்களாகும்.

ஈரானில் உள்ள இரண்டு பாலங்கள், ஒரு ரயில் நிலையம் மற்றும் ஒரு விமான நிலையம் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாலங்கள் மீதான தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்குப் பதிலடியாக, ஈரான் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தியது.

Advertisement