அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் சீர்குலைக்க முயற்சி; துணை அதிபர் ஜேடி வான்ஸ் பகீர் குற்றச்சாட்டு

12

வாஷிங்டன்: அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைக்க இஸ்ரேல் முயற்சி செய்து வருகிறது என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க படைகள் ஈரானின் வடக்கு பகுதிகள் மீது வான்வழி தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளன. ஈரான் தலைநகரின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்த நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் பேசியதாவது: அமெரிக்கா- ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் அரசு தடையாக உள்ளது. அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைக்க இஸ்ரேல் அரசில் உள்ள சிலர் முயற்சி செய்கின்றனர். அவர்கள் போரை காலவரையின்றி நீட்டிக்க விரும்புகிறார்கள். அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக இஸ்ரேல் அரசு செயல்படுகிறது.

இஸ்ரேல் அரசில் இருக்கும் சிலர், ராணுவ நடவடிக்கையைத் தொடர விரும்புவதால், எங்களைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இஸ்ரேல் அரசின் சில உறுப்பினர்களுடன் தனக்கு நல்ல உறவுகள் இருந்தாலும், போரை காலவரையின்றித் தொடரச் செய்வதற்காக, இஸ்ரேல் அரசில் சிலர் சதி செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியும்.

பல நாடுகள், நட்பு நாடுகள் மற்றும் எதிரி நாடுகள் அமெரிக்கக் கொள்கையில் செல்வாக்கு செலுத்த முயற்சிகின்றன. அந்த செல்வாக்கு, உண்மையில் அமெரிக்க அரசின் முக்கிய முடிவெடுப்பைப் பாதிக்கும்போதுதான் அது எனக்குக் கவலையளிக்கிறது. இவ்வாறு ஜேடி வான்ஸ் பேசியுள்ளார்.

Advertisement