கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி படம் பார்க்க போறீங்களா; 30 நிமிடம் முன்னதாக போகணும்!
நமது நிருபர்
'தி ஒடிசி' (The Odyssey) திரைப்படத்தை பார்ப்பதற்கு தியேட்டருக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வருவது மிகவும் நல்லது. இதற்கு காரணம் படம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் ஓடுகிறது, தொடக்கத்திலேயே கதையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஹாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். 'பேட்மேன்: தி டார்க் நைட், இன்டர்ஸ்டெல்லார், மெமெண்டோ, டெனன்ட்' உள்ளிட்ட பல உலக புகழ்பெற்ற படங்களை இயக்கியவர். இவர் இயக்கிற 'ஓப்பன் ஹெய்மர்' படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது. தற்போது 'தி ஓடிசி' என்ற படத்தை இயக்கி உள்ளார்.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் 'தி ஒடிசி' ஜூலை 17ம் தேதியான இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் காலை 9 மணிக்கு வெளியாகி உள்ளது. சினிமா வரலாற்றிலேயே முழு நேர படமும் ஐமேக்ஸ் கேமராக்களால் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுவாகும். படம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் ஓடுகிறது.
இந்தப் படத்தின் தொடக்கக் காட்சிகளும் மிக முக்கியமானவை மற்றும் தொடக்கத்திலிருந்தே கதையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே நீங்கள் ஆரம்ப காட்சிகளைத் தவறவிடாமல் இருக்க 30 நிமிடங்களுக்கு முன்பாக தியேட்டருக்குச் செல்வது சிறந்தது. மேலும் இது ஒரு நீண்ட திரைப்படமாகும்.
பீடிகை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. படம் பார்க்க மக்களை கவர புது உத்தி.
உள்நாட்டுத் தயாரிப்புக்களை மட்டுமே ஆதரிப்பது நல்லது. நம் மீது அநியாய வரி போடும் யு.எஸ் தயாரிப்புகள் வேண்டாமே.
when will they make such films in india.
இந்திய படங்களுக்கு உலகலாவிய சந்தை உருவாகும் போது.
அதுசரி படம் பார்க்காமலேயே இப்படிப் பட்ட படத்தை எப்போது உருவாக்குவோம் என்ற கேள்வி ஏன்?
வருடக் கணக்கில் உழைத்து பாகுபலி பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் எடுக்க படவில்லையா?
படம் ரொம்ப நீளமாக இருக்கும் போலயே