தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரம்: அமலாக்கத்துறையும் களமிறங்கியது
சென்னை: தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரம் தொடர்பான விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை போலீசார் ஒப்படைத்துள்ளனர். இதனை வைத்து அமலாக்கத்துறையினர் விசாரணையை துவக்க உள்ளனர்.
@1brகிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி, த.வெ.க., - எம்எல்ஏ இளையராஜாவுக்கு, 35 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசியது தொடர்பாக, திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் சென்னையை சேர்ந்த திருநாவுக்கரசு உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் பின்னணியில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் இருப்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களின் ஒருவரது வீட்டில் இருந்து, கணக்கில் வராத 60 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜூக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியிருந்தனர். இதனையடுத்து, ஆட்சி கவிழ்ப்பு தொடர்பான ஆவணங்களை அவர்களிடம் சென்னை போலீசார் வழங்கி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் விசாரணையை துரிதப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 பேரிடம் விசாரணை
இதனிடையே, இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன் அழைப்புகளின் அடிப்படையில் மேலும் 4 பேரிடம் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த கணேசன் மற்றும் ரகு உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
நேரலை
ஆட்சி கவிழ்ப்பு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை களமிறங்கி உள்ளது குறித்த பின்னணி குறித்து தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனை பார்க்க:
https://www.youtube.com/watch?v=YdMz5-CoyLk
வாசகர் கருத்து (12)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14 ஜூலை,2026 - 20:19 Report Abuse
இந்த வழக்கு முழுதும் முடியும்வரை செந்தில் பாலாஜி அவரது தம்பி இருவரையும் போலீசு சற்றே பாதுகாப்புடன் வைத்து இருப்பது நல்லது ஏனென்றால் திடிரென்று இருவருமே காணாமல்
போயிடுவார்கள் பிறகு தேடி பயன் இருக்காது பல வருடங்கள் ஆகும் அவர்கள் இருவரும் இந்த விஷயத்தில் கில்லாடிகள் எப்படி மறைவது எப்படி தோன்றுவது என்று எல்லாமே அறிந்தவர்கள் அவர்களுக்கு திராவிட மாடல் அரசின் உதவி முழுதும் உள்ளது என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் ஜாக்கிரதை 0
0
Reply
M.Selvam - Chennai/India,இந்தியா
14 ஜூலை,2026 - 15:20 Report Abuse
இந்த மாத்தி ஒட்டு போட்ட 25 பேர்..ராஜினாமா செய்து சேவை செய்யதுடிக்கும் 6 பேர் சனிக்கிழமை விரதம் போல் விழா நடத்தி இணைப்பு என்னும் பெயரில் ஊழல் பேர்வழிகள் சேர்வது இவற்றையும் கொஞ்சம் கவனித்தால் மட்டுமே இதை கொஞ்சமாவது நம்ப முடியும்... மக்களே மஹா கடுப்பு மற்றும் வெறுப்பில் உள்ளனர் நொந்து போய்... 0
0
Reply
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
14 ஜூலை,2026 - 14:21 Report Abuse
வெல்வோம் இருநூறு படைப்போம் வரலாறு என்று 2.0 கனவு கண்டு, ஆட்சி அதிகாரத்தை எதிர்பாராமல் இழந்தவர்கள். இதனால் தமிழகம் தப்பி பிழைத்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, கோடி கோடியாக உருட்டி திரட்டி வைத்த பணத்தை, யாரிடம் கொடுத்தாவது, எண்ணியதை முடிக்க வேண்டும் என்று நினைத்து இருக்கலாம். அனைவரையும் பிடித்து தட்டினால் உண்மை வெளிவரும் 0
0
M.Selvam - Chennai/India,இந்தியா
14 ஜூலை,2026 - 15:22Report Abuse
இப்ப 108 வாங்குன ஆட்சி யார் முட்டுக் கொடுத்து நடக்குது? 126 மக்கள் வெற்றி பெறச் செய்த எதிர் அணி.. 0
0
Reply
PVSR - ,
14 ஜூலை,2026 - 14:00 Report Abuse
அவ்வளவுதான் ஊத்தி மூடின கதை தான் தமிழாக்கத்துறை இதுவரை எத்தனை பேருக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளது. 0
0
Reply
GRK - Bengaluru,இந்தியா
14 ஜூலை,2026 - 13:48 Report Abuse
குதிரை பேரவிவகாரம் தொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறை களமிறங்கியது என்று கூறலாமே . 0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
14 ஜூலை,2026 - 13:12 Report Abuse
செந்தில் பாலாஜி சகோதரர்களையும் மாறன் சகோதரர்களையும் எந்த கொம்பனாலும் தொட முடியாது . ஊழல் செய்வதற்கு என ஏகபோக உரிமை பெற்றுஉள்ளனர். மக்கள் மடையர்கள் . 0
0
Reply
விருமாண்டி - Benaras,இந்தியா
14 ஜூலை,2026 - 12:57 Report Abuse
கவர்மெண்ட் பிளீடர் பணிக்கு 1200 கோடி லஞ்சம் வெள்ளமாக ஓடியிருக்கு. பள்ளிக்கல்வி துறையில் குறைந்தபட்சம் 200 கோடி கழுகுப்பார்வையில் சிக்கியிருக்கு. சிக்காதது இன்னொரு 1000 கோடியாவது இருக்கும் என்று பள்ளிகளின் முதலாளிகள் கண்ணீருடன் சொல்கிறார்கள். அப்ப எட்டிப்பார்க்காது ஈடி இப்போ ஏன் வந்தது? விஜெயின் குடுமியை பாஜாகா கையில் சிக்க வைக்க யார் போட்ட பிளான் இது ? 0
0
Reply
விருமாண்டி - Benaras,இந்தியா
14 ஜூலை,2026 - 12:46 Report Abuse
கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதை தான். தவெக வுக்கு தன்னோட கூட்டணிக்குள் சேர்த்து கொண்ட தலைகளுக்கு எப்படி கணக்கு காட்டுவது என்ற பேதி ஆரம்பித்து இருக்கும். பேதி என்றவுடன் பின்னாடி குனாவும், பரக்காவலியும் மோப்பம் பிடித்து கெளம்பி வருவாங்க. 0
0
Reply
விருமாண்டி - Benaras,இந்தியா
14 ஜூலை,2026 - 12:41 Report Abuse
ஹிஹி , இப்படி சம்பந்தமில்லாமல் கேள்விய கேட்டால் உங்களையும் விசாரிக்க வருவாங்க.தற்குறி வெக பாஜக பீ டீம் என்று நினைத்தவர்களுக்கு, அதுக்கும் மேலே என்று புரிய வந்திருக்கும். 0
0
Reply
karthik - chennai,இந்தியா
14 ஜூலை,2026 - 11:46 Report Abuse
மாற்று கட்சியை MLA க்களை சத்தமில்லாமல் விலைக்கு வாங்கியதை எல்லாம் யாரு விசாரிப்பா? 0
0
M.Selvam - Chennai/India,இந்தியா
14 ஜூலை,2026 - 15:26Report Abuse
அதுக்கு கடவுளே வந்தா தான் உண்டு.. ஓட்டு போட்ட நமக்கு நாமம் போட்ட ஆட்கள்விழா எடுத்து வேறு கட்சியில் சேர்வது விசில் ஆட்சியில் தான்.. கால கொடும 0
0
Reply
மேலும்
-
புதுச்சேரிக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து விமான சேவை துவங்க நடவடிக்கை :கவர்னர் தகவல்
-
ஊசுடு தொகுதியில் எம்.எல்.ஏ., உதவிகள் வழங்கல்
-
புதுச்சேரியில் பிரெஞ்சு தேசிய தினம் கொண்டாட்டம்
-
தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது 6 பைக்குகள் பறிமுதல்
-
காலியிடங்கள் அதிகரிப்பு நர்ஸ்கள் போராட்டம்
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்னேற்பாடு கூட்டம்
Advertisement
Advertisement