கோவில் நிலத்திற்கான தடை நீக்கம்: பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரை: கரூர் மாவட்டத்தில், 4 கோவில்களுக்கு சொந்தமான, 3,085 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய விதித்த தடையை நீக்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில், மூன்று பிரதான கோவில்களின் சொத்து விவகாரத்தில், பல ஆண்டுகளாக பதிவு தடையில் இருந்த, 3,085 ஏக்கர் நிலங்கள் மீதான பத்திரப்பதிவு தடை ஆணையை தமிழக அரசு விலக்கி கொண்டது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன், சேலம் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, முறையிட்டதாவது:
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவில், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூடலுார் விக்ருதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 3,084.95 ஏக்கர் நிலங்கள், 15 கிராமங்களில் உள்ளன.
இவற்றிற்கு, 3,390 தனிநபர்கள் பெயரில் ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்நிலங்களுக்கு பத்திரப்பதிவு செய்ய, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது. அத்தடையை நீக்குவதாக கலெக்டர் ஜூலை 9ல் உத்தரவிட்டார்.
ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் அரசின் முன் அனுமதியின்றி கோவில் நிலங்களை பதிவு செய்ய, அதிகாரிகள் வழிவகுத்துள்ளனர். நிலத்தின் மதிப்பு, 25,000 கோடி.
ஆக்கிரமிப்பாளர்களின் நலனுக்காக தடை நீக்கப்பட்டுள்ளது. இது, தன்னிச்சையானது. அதை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளேன். அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இன்று விசாரணை நடத்தினர். அப்போது, இந்த மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.,11க்கு ஒத்திவைத்தனர்.
அது என்ன ஹிந்துக்களின் கோவில் நிலங்களிலேயே, கோவில் சொத்துக்களிலேயே ஒருசிலர் குறியாக இருக்கிறார்கள்? போகவேண்டியதுதானே மற்ற மத வழிபாட்டு இடங்களுக்கு. தைரியம் இல்லையா?
முழு கிரயம் ஆகாத எந்த பத்திர பதிவும் தற்காலிகமானது. செல்லத்தக்கது அல்ல. அதற்கு வழங்கும் பட்டா போலியானது. கிரயம் பெற்ற சொத்து தான் கோவிலுக்கு தானமாக கொடுக்க பட்டு இருக்கும். பள்ளி, நூல் நிலையம், கோவில்.. போன்றவைக்கு கொடுத்த தான சொத்தை மாற்ற முடியாது. மறு கிரயம் பண்ண முடியாது. உயில் என்றால் இறந்த பின், உயில் பெற்றவர் பெயருக்கு மாறி விடும். ஒரு ஊரில் உள்ள நூல் நிலையம் பராமரிக்க சந்தை வருமானதை கொண்டு பராமரிக்க வேண்டும் என்று ஒரு அதிகாரி எழுதியுள்ளார்.? இன்றும் இயங்கி வருகிறது. கோவில் தான சொத்து பராமரிக்க மட்டும் தான். விற்பனைக்கு அல்ல. ஆளும் கட்சி பதில் இஷ்டம் போல் கொடுப்பர். குற்றம் வெளிபடையாக தெரிவதால், ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனாம் நிலம் என்றல் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலவரிகு அரசால் விலக்கு அளிக்கப்பட்ட நிலம். இதில் இந்த நிலத்தில் இருந்து வரும் வருவாயை வைத்து திருக்கோவில்கள் பராமரிக்க படவேண்டும் அதற்கு இந்து சமய அறநிலைய துறையால் வாடகை அல்லது குத்தகை வரி வசூலிக்கப்படவேண்டும். அக இந்த இனாம் நிலம் திருக்கோவிலுக்கு சொந்தமானதாகும். அறநிலைய துரையின் குத்தகை வரி என்பது வேறு இனாம் வரி விலக்கு என்பது வேறு. ஆக திருக்கோவில் நிலத்தை திருடுவதற்காகவே இந்த அரசனை பிறப்பிக்கப்பட்டுளளது. இனாம் ஒழிப்பு என்ற பெயரில் சென்னை இல் சில கல்லூரி அமைந்துள்ள சிவன் கோவில் இடம் கல்லூரிக்கு சொந்தமாகிவிடுமா இதற்கு இந்த அரசனை தேவையா. இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது சட்டபூர்வமாக ஆராய வேண்டும்.
சிலர் இதை கோவில் ஊழியர் நன்கொடை நிலம் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் அதன் மூல கொடை பத்திரம் சோதிக்கபட வேண்டும். மேலும், அதில் கூறப்பட்ட வரைமுறைகள் பின்பற்றபட வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், அவருடைய சமீபத்திய செயல்பாடுகள் அண்ணன் சேகர் பாபுவை விஞ்சி நிற்கின்றது.
அட போங்கப்பா. இந்து என்றால் திருடன் என்று விளக்கம் கொடுத்துட்டு
போயிருக்காங்க. அதுனால திருடனின் வழிபாட்டு இடங்களில் தான் கை வைக்கணும் இல்லையா? மத்தவங்க திருடனிடம் பறி கொடுத்தவங்க போல. அதுனால தான் அங்கெல்லாம் கை வைக்க முடியாது.
அது சரி. அந்த சொத்தை எல்லாம் ஆண்டு அனுபவித்து வரும் பாக்கியசாலிகள் யாராக இருக்கும்? ஓகோ, அதை தான் கோர்ட் கேட்டிருக்கோ? சரி.
வேற யாரு??
தட்சிணாமூர்த்தி ஐயா சொன்ன அதே திருடர்கள் என்று பொருள் கொள்ளும் இந்துக்கள்தான்
கோவில் நிலத்தை பராமரிக்க முடியவில்லை என்றால் அரசு அனுமதி நேற்று நியாயமான விலைக்கு ஏலம் விடலாம்?
எவ்வளவு விரைவாக சுருட்டமுடியுமோ அவ்வளவு விரைவாக சுருட்டவேண்டும் என்ற எண்ணமா .
விஜயபாஸ்கர் கோரிக்கை வைச்சு பேசுவாராம்.. உடனே சிஎம் ஜோசப் அதுக்கு ஒப்புதல் அளிப்பாராம்... நல்ல சினிமா கூத்து. ஹைகோர்ட் இடைக்கால தடை விதிக்கவேண்டும்.
அதெப்படி குமாரு,, கோவில் நிலம் என்றால் அனுமதி,,, பிற இடம் என்றால் என்ன?
சிலர் , கருத்து பதிவிட்டு இருக்கிறார்கள் . கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்த சொத்து கோவிலை பராமரிக்க மட்டுமே . அந்த சொத்துவிலிருந்து வரும் வருமானம் மிகையாக இருந்தால் , மற்ற பணிகளுக்கு செலவு செய்யலாம் . ஆனால் , அந்த சொத்தையையே ஆட்டைய போட்டால் , அதற்கு பெயர் திருட்டு . திராவிட அடிவருடிக்கல்லுக்கு இந்த விடயம் புரியாதது . ஏனென்றால் , அவர்களுக்கு திருடுவது என்பது தான் கொள்கை .மேலும்
-
புதுச்சேரிக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து விமான சேவை துவங்க நடவடிக்கை :கவர்னர் தகவல்
-
ஊசுடு தொகுதியில் எம்.எல்.ஏ., உதவிகள் வழங்கல்
-
புதுச்சேரியில் பிரெஞ்சு தேசிய தினம் கொண்டாட்டம்
-
தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது 6 பைக்குகள் பறிமுதல்
-
காலியிடங்கள் அதிகரிப்பு நர்ஸ்கள் போராட்டம்
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்னேற்பாடு கூட்டம்