காட்டுப்பாக்கத்தில் வரும் 17ல் பழங்களில் மதிப்பு கூட்டிய பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி
முலாம் பழம், தர்ப்பூசணி ஆகிய பழங்களில், மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரிப்பு குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஆர். திருமாவளவன் கூறியதாவது:
செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, நாளை மறுதினம், பழங்களில் மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரிப்பு குறித்து ஒரு நாள் இலவச அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில், முலாம் பழம், தர்ப்பூசணி ஆகிய பழங்களை பயன்படுத்தி ஜூஸ், ஜாம், ஜெல்லி, சர்பத் ஆகிய மதிப்பு கூட்டி விற்பனை செய்வது, மதிப்பு கூட்டிய உணவுப்பொருட்களை பதப்படுத்துதல், சந்தைபடுத்துதல், மகளிர் குழுவினர் சிறிய அளவிலான தொழில் தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இந்த பயிற்சி முகாமில், பட்டம், டிப்ளமா படித்த இளைஞர்கள், விவசாயிகள் பங்கேற்று பயிற்சி பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
– ஆர்.திருமாவளவன்,
99405 42371.
மேலும்
-
புதுச்சேரிக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து விமான சேவை துவங்க நடவடிக்கை :கவர்னர் தகவல்
-
ஊசுடு தொகுதியில் எம்.எல்.ஏ., உதவிகள் வழங்கல்
-
புதுச்சேரியில் பிரெஞ்சு தேசிய தினம் கொண்டாட்டம்
-
தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது 6 பைக்குகள் பறிமுதல்
-
காலியிடங்கள் அதிகரிப்பு நர்ஸ்கள் போராட்டம்
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்னேற்பாடு கூட்டம்