ஸ்டேஷன் மாஸ்டர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை: மதுரை ரயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில், அனைத்திந்திய நிலைய மேலாளர்கள் சங்கம் (ஏ.ஐ.எஸ்.எம்.ஏ.,) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோட்டத்தலைவர் ராஜராஜேஸ்வரன் தலைமை வகித்தார். ரயில்வே கோட்டங்களுக்கு இடையேயான பணியிட மாற்றங்களில் நிலவும் குளறுபடி, ஆட்கள் பற்றாக்குறை, 12 மணி நேர பணிமுறை என ஸ்டேஷன் மாஸ்டர்கள் தொடர்ந்து பணிச்சுமையால் பாதிக்கப்படுகிறார்கள். ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் இருந்து வணிகப்பிரிவு சார்ந்த பணிகளை முழுமையான விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முன்னாள் செயலாளர் சங்கரநாராயணன், டி.ஆர்.இ.யூ., கோட்டச்செயலாளர் சிவக்குமார், சரவணன் பங்கேற்றனர். கோட்டச்செயலாளர் வாகையடிமூர்த்தி ஒருங்கிணைத்தார். சங்க தெற்கு ரயில்வே முன்னாள் பொதுச்செயலாளர் ராஜிவ்காந்தி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரிக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து விமான சேவை துவங்க நடவடிக்கை :கவர்னர் தகவல்
-
ஊசுடு தொகுதியில் எம்.எல்.ஏ., உதவிகள் வழங்கல்
-
புதுச்சேரியில் பிரெஞ்சு தேசிய தினம் கொண்டாட்டம்
-
தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது 6 பைக்குகள் பறிமுதல்
-
காலியிடங்கள் அதிகரிப்பு நர்ஸ்கள் போராட்டம்
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்னேற்பாடு கூட்டம்
Advertisement
Advertisement