சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்
பண்ருட்டி: சரநாராயண பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று, ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் ஸ்ரீதன்வந்திரி பெருமாளாக அருள்பாலித்தார்.
இதையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம்; 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:30 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடாகி திருகண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு நித்யபடிபூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.
பக்தர்கள் அனைவருக்கும் தன்வந்திரி மகா பிரசாதமாக பலவகை மூலிகைகள் கொண்டு தயாரித்த லேகியம் வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரிக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து விமான சேவை துவங்க நடவடிக்கை :கவர்னர் தகவல்
-
ஊசுடு தொகுதியில் எம்.எல்.ஏ., உதவிகள் வழங்கல்
-
புதுச்சேரியில் பிரெஞ்சு தேசிய தினம் கொண்டாட்டம்
-
தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது 6 பைக்குகள் பறிமுதல்
-
காலியிடங்கள் அதிகரிப்பு நர்ஸ்கள் போராட்டம்
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்னேற்பாடு கூட்டம்
Advertisement
Advertisement