கிரிக்கெட் போட்டியில் தகராறு: 4 பேர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறிலப் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சின்னசெவலை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் பரத், 20; இவரும் இதே ஊரைச் சேர்ந்த ரகோத்தமன் மகன் சகாதேவன்,19; இருவரின் இரு அணிகளாக கிரிக்கெட் விளையாடினர்.

அப்போது இரு அணிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இரு தரப்பு புகாரின் பேரில், பரத், சகாதேதவன் உட்பட 10 பேர் மீது திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து, சகாதேவன், பரத், சுப்ரமணி மகன் வசந்த், 27; மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Advertisement