பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: தி.மு.க., ஆட்சியின்போது, செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் என, செவிலியர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு மாறாக, சில பணியிடங்களை, தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க, புதிதாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இம்மாதம் 11ம் தேதி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில், செவிலியர்கள் ஈடுபட்டனர். நேற்று, தமிழகம் முழுதும், கலெக்டர் அலுவலகங்களில், செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement