உள்ளூர் கொள்முதலால் பாக்கு விற்பனை அமோகம்; சாகுபடி பரப்பும் அதிகரிப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாயிலாக, ஏலம் நடை பெறுவதால், பாக்கு சாகுபடி பரப்பு அதிகரிப்பதுடன், லாபகரமான தொழிலாக மாறி வருகிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள், வியாபாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டம் பவானி, கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், அம்மாபேட்டை பகுதியில் பாக்கு தோட்டங்கள் அதிகம் உள்ளன. சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் பாக்கு அதிகமாக விளைவிக்கப் படுகிறது.
தற்போது பவானி, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும், பக்கத்து மாவட்டங்களில் காரமடை, வாழப்பாடி சந்தைகளிலும் பாக்கு விற்கின்றனர். ஈரோடு மாவட்டத்தின், 4 சந்தைகளில் கடந்த 3 மாதங்களில், 350 டன் பாக்கு விற்பனையானது.
கர்நாடக சந்தையை விட, உள்ளூர் சந்தையில் சேமிப்பு, உடனடி பண பரிவர்த்தனை, லாபமான விலை ஆகியவை கிடைக்கின்றன. இதனால், பாக்கு சாகுபடி பரப்பு கடந்த, 2 ஆண்டுகளில், 100 ஏக்கருக்கு மேல் அதிகரித்து உள்ளது.
இவ்வாறு கூறினர்.
நம்நாட்டில் ஆண்டுக்கு, 12 முதல் 13 லட்சம் டன் பாக்கு உற்பத்தி செய்யப்படுகிறது தேசிய அளவில் பாக்கு உற்பத்தியில், கர்நாடகா முதலிடம்; கேரளம், அசாம் அடுத்தடுத்த இடம் தமிழகத்தில் ஆண்டுக்கு, 80,000 முதல், 90,000 டன் வரை பாக்கு விளைவிக்கப்படுகிறது ஆண்டுக்கு, 30,000 டன் வரை நேபாளம், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பாக்கு ஏற்றுமதி.
@block_B@ பவானி ஒழுங்குமுறை விற்பனை கூட பாக்கு ஏலம் (கிலோ/ரூ.) பாக்கு (காய்ந்தது) 202.12 - 207.80 பாக்கு (பச்சை) 60 - 60.30 சாலி பாக்கு 403.35 - 407.20 பாக்கு பழம் 94.55 - 97.55block_B
மேலும்
-
மனிதநேயம் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்; முதல்வர் விஜய்
-
தங்கம் சவரனுக்கு ரூ.400, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் சீர்குலைக்க முயற்சி; துணை அதிபர் ஜேடி வான்ஸ் பகீர் குற்றச்சாட்டு
-
கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி படம் பார்க்க போறீங்களா; 30 நிமிடம் முன்னதாக போகணும்!
-
அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது வான்வழி தாக்குதல்; 7 பேர் உயிரிழப்பு
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 13 பேர் கைது; நாடு கடத்தும் பணி தீவிரம்