காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தேனி:தேனியில் நடந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை முன்னாள் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். அழகராஜா கல்வி அறக்கட்டளை சார்பில் வர்த்தக பிரமுகர் அஜய்கார்த்திக்ராஜா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முல்லைப்பெரியாறு முத்தமிழ் மன்ற உறுப்பினர்கள் கவிதா, மனோகரன்,கிருஷ்ணபிரபா, சினிமா தயாரிப்பாளர் பாரத் சுருளி வேல், தண்டபானி, ஞானம், மாவட்ட காங்., தலைவர் கோபிநாத் உள்பட பலர் பங்கேற்றனர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிர்வாகி பன்னீர்செல்வம், பெருந்தலைவர் காமராஜர் நற்பனை இயக்க நண்பர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.
உத்தமபாளையம்: மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழாவிற்கு உறவின்முறை தலைவர் குமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் தங்கபொன்ராஜா முன்னிலை வகித்தார். செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். பொருளாளர் முத்துராஜா ஒருங்கிணைத்தார். காமராஜர் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
உத்த பாளையம் எஸ் ஏ.பி. மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினர் . தாளாளர் கண்ணன் தலைமை வகித்தார், செயலர் முருகன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஜியாவுல் ஹக் வரவேற்றார். கல்லூரி பேராசிரியை தமிழ் செல்வி வாழ்த்தி பேசினார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
மேலும்
-
மனிதநேயம் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்; முதல்வர் விஜய்
-
தங்கம் சவரனுக்கு ரூ.400, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் சீர்குலைக்க முயற்சி; துணை அதிபர் ஜேடி வான்ஸ் பகீர் குற்றச்சாட்டு
-
கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி படம் பார்க்க போறீங்களா; 30 நிமிடம் முன்னதாக போகணும்!
-
அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது வான்வழி தாக்குதல்; 7 பேர் உயிரிழப்பு
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 13 பேர் கைது; நாடு கடத்தும் பணி தீவிரம்