2 டன் அரிசி கருகியது
சிவகங்கை:சிவகங்கையில் அரிசி மூடை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்ததில் லாரி சேதமடைந்து 2 டன் அரிசி தீயில் கருகி வீணானது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் காரைக்குடி அருகே மானகிரியில் இருந்து 30 டன் அரிசியை ஏற்றிக்கொண்டு சிவகங்கை நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு வந்தார். சிவகங்கை 48 காலனி அருகே உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் லாரியை நிறுத்திவிட்டு அரிசி மூடைகளை இறக்குவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாரத விதமாக லாரியின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. லாரி உரிமையாளர் செல்வராஜ் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் 2 டன் அரிசி வீணானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement