மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்
மதுரை: மதுரை புதுார் மின்வாரிய அலுவலகம் முன்பு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மண்டல தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
ஒப்பந்த ஊழியர்கள் கூறுகையில், 'மின்வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றுகிறோம். தற்போது டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மூலம் பணி நிரப்புவது எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. புதிய ஆட்சேர்ப்புகளில் ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். நீண்ட காலம் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்நரம் செய்ய வேண்டும்' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement