டெங்கு விழிப்புணர்வு பேரணி
குஜிலியம்பாறை:குஜிலியம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி பாளையத்தில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ரோகித் தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் வீரகடம்புகோபு, முருகானந்தம், பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.
பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணி கடைவீதி, யூனியன் ஆபீஸ் வரை சென்று பஸ் ஸ்டாண்டில் முடிவற்றது. பேரணியில் கொசு உற்பத்தியை தடுப்போம், டெங்கு பரவலை தடுப்போம், காய்ச்சலுக்கு உடனே சிகிச்சை எடுப்போம், உயிர் இழப்பை தவிர்ப்போம் என விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement