ஆகாய கங்கை நீர் வீழ்ச்சிக்கு செல்ல தடை
சேந்தமங்கலம்:நாமக்கல் மாவட்டத்தில், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அந்த மலையில் அரப்பளீஸ்வரர்
கோவில் எதிரே, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. 1,300 படிகள்
இறங்கினால்தான் அங்கு செல்ல முடியும்.
அடர்ந்த வனப்பகுதியில், 300 அடி
உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி விட்டது போல தண்ணீர் கொட்டி வரும்,
அந்த அருவியை கண்டு ரசிப்பதற்காகஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு
சுற்றுலா பயணிகள் செல்வர். அந்த அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த
குளியல் போட்டு திரும்புவர். இந்நிலையில், அந்த அருவியில் நீர்வரத்து முற்றிலும் வற்றியதால் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று ஏமாற்றம் அடைந்து விடக்
கூடாது
என்பதற்காக, வனத்துறையினர் அங்கு செல்ல நேற்று முதல்
தற்காலிகமாக தடை விதித்துள்ளனர். இன்று ஆடி 1ம் தேதி பிறப்பதால் தலை
ஆடி தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு, புதுமண தம்பதியர் உள்பட
சுற்றுலா பயணிகள் பலரும் அங்கு புனித நீராட செல்வர். இந்நிலையில்
தண்ணீர் வரத்து இல்லாத காரணத்தால், அருவிக்கு செல்ல தடை உள்ளதால்
சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும்
-
பணி ஆணை வழங்கும் விழா
-
தாசில்தார், துணை தாசில்தார் கலந்தாய்வு அரசாணை பெற்று நடத்த கோரிக்கை
-
கருவேல மரங்களால் நீராதாரம் பாதிப்பு விவசாயிகள் கவலை
-
ஆர்.எஸ்.மங்கலம் கைகாட்டி விலக்கு பஸ் ஸ்டாபில் நிழற்குடை அவசியம்
-
இன்பாக்ஸ் மருத்துவமனையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
-
போதைத் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குழுக் கூட்டம்