அத்தப்பம்பட்டி ஏரியில் மீன்பாசி ஏலம் ரத்து

மல்லசமுத்திரம்:அத்தப்பம்பட்டி ஏரியில், ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளதால் அதை முறையாக அகற்றிவிட்டு பின்னர், மீன்பாசி ஏலம் நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மல்லசமுத்திரம் யூனியன், அத்தப்பம்பட்டி ஏரி சர்வே எண்;169ல், நேற்று மீன்பாசி ஏலம் குத்தகைக்கு விடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில், ஏரியில் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் அதிகாரிகளிடத்தில் முறையிட்டதன்பேரில், ஏலம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து, மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் கூறுகையில்,''ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பின்னர், இ-டெண்டர் முறையில் முறையாக ஏல அறிவிப்பு வெளியாகும்,'' என்றார்.

Advertisement