காமராஜர் பிறந்த நாள் விழா
திண்டுக்கல், ஜூலை 17
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் நீர் மேலாண்மையின் தந்தை இரண்டாம் கரிகாலச்சோழன், முன்னாள் முதல்வர் காமராஜரின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு இருவரது உருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர். மன்றப் பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சசிக்குமார், சுந்தரமகாலிங்கம், ஆறுமுகம், திருமுருகன், அர்ச்சனன், அருணகிரி, நாகரத்தினப்பாண்டி, சரவணன், விமல்குமார் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட காமராஜர் சிவாஜி தேசிய பேரவை நிறுவனர் வைரவேல், ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் ஆகியோர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement