காமராஜர் பிறந்தநாள் விழா

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகர காங்., சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நகர தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். நரசிங்கம் முன்னிலை வகித்தார்.

பாரூக் வரவேற்றார். விஷ்ணுபிரசாத் எம்.பி., முன்னாள் மாவட்ட தலைவர் திலகர் ஆகியோர் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கினர்.

மாவட்ட தலைவர் ரங்கமணி அன்னதானம் வழங்கினார். மாநில செயலாளர் சந்திரசேகர் மாணவர்களுக்கு நோட்டுகள், எழுது பொருட்களை வழங்கினார்.

சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரஹீம், டாக்டர் பிருந்தாவன் குமார் ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

நாகமுத்து, பஷீர்அகமது, சலாவுதீன், சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement