மகள் மாயம்: தாய் புகார்

வடலுார்: மகள் மாயமானது குறித்து தாய் போலீசில் புகார் அளித்தார்.

குறிஞ்சிப்பாடி அடுத்த பாச்சாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் மகள் அருணா, 18; கடலுார் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து தனது மகள் மாயமானதாக தாய் கலைச்செல்வி, வடலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement