அமன் ஷெராவத் 'தங்கம்': 'ரேங்கிங் சீரிஸ்' மல்யுத்தத்தில்
புடாபெஸ்ட்: 'ரேங்கிங் சீரிஸ்' மல்யுத்த போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத் தங்கம் வென்றார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், 'ரேங்கிங் சீரிஸ்' மல்யுத்த தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அமன் ஷெராவத், ஜார்ஜியாவின் ராபர்டி டிங்காஷ்விலி மோதினர். பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) வெண்கலம் வென்ற அமன் ஷெராவத் 13-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 61 கிலோ பிரிவு வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் தீபக், அஜர்பெய்ஜானின் நுராட்டின் நோவ்ருசோவ் மோதினர். இதில் தீபக் 9-8 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 13 பேர் கைது; நாடு கடத்தும் பணி தீவிரம்
-
அமெரிக்க அதிபர் டிரம்பின் செல்வாக்கு தொடர்ந்து சரிவு
-
குள்ளஞ்சாவடி மினி ஸ்டேடியம் பணி விறு விறு
-
தமிழக மருந்து, ஆபரண உற்பத்தியில் சிறுதொழில்களை மேம்படுத்த முடிவு
-
இறக்குமதி பொருட்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்
-
வீரமங்கை வேலுநாச்சியார் வரலாற்று நாடகம், பாராட்டு விழா
Advertisement
Advertisement