வீரமங்கை வேலுநாச்சியார் வரலாற்று நாடகம், பாராட்டு விழா
புதுச்சேரி: மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாடமி மற்றும் புதுச்சேரி தமிழ்ச்சங்கம் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் வரலாற்று நாடகம் மற்றும் பாராட்டு விழா நடந்தது.
தமிழ்சங்க அரங்கில் நடந்த விழாவில், நாடகத்துறையில் முதன் முதலாக தேசிய அளவிலான 'யுவ புரஸ்கார்' விருது பெற்ற பெண் கலைஞர் வீரம்மாள் இயக்கத்தில் 'வீரமங்கை வேலுநாச்சியார்' வரலாற்று நாடகம் நடந்தது.
நாடகத்திற்கான கதை மற்றும் வசனத்தை ராஜா எழுதியிருந்தார். நாடகத்தை தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவிற்கு, தமிழ் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார்.
செயலாளர் சீனு மோகன்தாஸ், கண்மணி கிரியேஷன்ஸ் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். கண்மணி கிரியேஷன்ஸ் தலைவர் ராஜா வரவேற்றார். அமைச்சர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு, தேசிய விருது பெற்ற பெண் கலைஞர் யுவ புரஸ்கார் வீரம்மாள், பாவைக்கூத்து திரைப்பட இயக்குநர் ராஜேஷ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.
கலைப்பண்பாட்டுத்துறை இயக்குநர் சக்திவேல், முன்னாள் இயக்குநர் கலியபெருமாள், கண்காணிப்பாளர் அருள்ராஜ், வேல்முருகன், சங்கீத நாடக அகாடமியின் பாலகிருஷ்ணன், சீனு. வேணுகோபால் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மேலும்
-
பணி ஆணை வழங்கும் விழா
-
தாசில்தார், துணை தாசில்தார் கலந்தாய்வு அரசாணை பெற்று நடத்த கோரிக்கை
-
கருவேல மரங்களால் நீராதாரம் பாதிப்பு விவசாயிகள் கவலை
-
ஆர்.எஸ்.மங்கலம் கைகாட்டி விலக்கு பஸ் ஸ்டாபில் நிழற்குடை அவசியம்
-
இன்பாக்ஸ் மருத்துவமனையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
-
போதைத் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குழுக் கூட்டம்