தமிழக மருந்து, ஆபரண உற்பத்தியில் சிறுதொழில்களை மேம்படுத்த முடிவு
சென்னை: தமிழகத்தில் மருந்து, ஆபரணங்கள் உற்பத்தியில் உள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்களின் தேவைகளை கண்டறிந்து, அதற்கு ஏற்ப கொள்கைகளை உருவாக்கி தொழில்களை மேம்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, மின் சாதன பாகங்கள் போன்றவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்நிறுவனங்கள், சர்வதேச போட்டியை சமாளிக்கும் வகையில் திறனை மேம்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
அதன்படி, தற்போது மருந்து, தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கான விரிவான செயல் திட்டத்தை தயாரிக்க உள்ளது. இதற்காக ஆலோசகர்களை நியமிக்க, தமிழக அரசின், 'பேம் டி.என்' நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. ஆலோசகர்கள் வாயிலாக மாநிலம் முழுதும் எத்தனை நிறுவனங்கள் உள்ளன, நிறுவனங்களின் தேவைகளை கேட்டறிந்து, செயல்திட்ட கொள்கைகள் உருவாக்கப்படும்.
அதற்கு ஏற்ப அரசிடம் அனுமதி பெற்று, புதிய தொழிற்பேட்டைகள், மானிய சலுகை, கடன் திட்டங்கள் உள்ளிட்ட ஊக்குவிப்பு சலுகை வழங்கப்படும்.
மேலும்
-
பணி ஆணை வழங்கும் விழா
-
தாசில்தார், துணை தாசில்தார் கலந்தாய்வு அரசாணை பெற்று நடத்த கோரிக்கை
-
கருவேல மரங்களால் நீராதாரம் பாதிப்பு விவசாயிகள் கவலை
-
ஆர்.எஸ்.மங்கலம் கைகாட்டி விலக்கு பஸ் ஸ்டாபில் நிழற்குடை அவசியம்
-
இன்பாக்ஸ் மருத்துவமனையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
-
போதைத் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குழுக் கூட்டம்