மதுரையில் காற்றழுத்தம்: வானில் வட்டமடித்த விமானங்கள்
அவனியாபுரம்: மதுரை விமான நிலையப் பகுதியில் காற்றழுத்தம் காரணமாக ஒரு விமானம் 40 நிமிடங்களும், மற்றொரு விமானம் 25 நிமிடங்களும் வானில் வட்டமடித்து தரை இறங்கின. நவி மும்பையில் இருந்து 179 பயணிகளுடன் நேற்று மதியம் 1:25 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், மதியம் 3:25 மணிக்கு மதுரை வந்தது.
மதுரை விமான நிலையப் பகுதியில் அதிகமான காற்றழுத்தம், வானிலை மாற்றம் காரணமாக அந்த விமானம் தரையிறங்க முடியாமல் 40 நிமிடங்கள் வானில் வட்டமடித்து பின் தரை இறங்கியது.
அதேபோல் சென்னையில் இருந்து நேற்று மதியம் 2:25 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், மதுரைக்கு நேற்று மதியம் 3:35 மணிக்கு வந்தது. அந்த விமானமும் காற்றழுத்தம் காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் 25 நிமிடங்கள் வட்டமடித்து பின் தரையிறங்கியது. அந்த விமானத்தில் அமைச்சர் நிர்மல் குமார் உட்பட 166 பயணிகள் பயணம் செய்தனர்.
மேலும்
-
ஏஐ துறையில் ஒரு நாட்டின் ஆதிக்கம் மட்டுமே இருக்கக்கூடாது; சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்
-
சென்னை -பெங்களூரு இடையே புல்லட் ரயில்: ரூ.18 ஆயிரம் கோடி திட்டத்திற்கு டெண்டர்
-
கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் ரூ.7 .5 லட்சம் லஞ்சத்தொகை பரிமாற்றம்; சோதனையில் அம்பலம்
-
தொடந்து நீடிக்கும் அமெரிக்கத் தாக்குதல்கள்; ஈரான் கடும் எச்சரிக்கை
-
சிறிய வீடு கட்ட பிரீகாஸ்ட் கட்டுமான முறை உகந்ததா?
-
சுவர்களில் ஈரம்...அலர்ஜி ஏற்படுத்தும்! ஆரம்பத்திலேயே தடுப்பது கட்டடத்துக்கும் நலம்