ஏஐ துறையில் ஒரு நாட்டின் ஆதிக்கம் மட்டுமே இருக்கக்கூடாது; சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்
பீஜிங்: ஏஐ துறையில் ஒரு நாட்டின் ஆதிக்கம் மட்டுமே இருக்கக்கூடாது என சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஷாங்காயில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது: சீனாவின் ஏஐ தொழில்நுட்பங்கள், அமெரிக்காவின் மிகச் சிறந்த தொழில்நுட்பங்களுக்கு இணையாக வளர்ந்து வருவதுடன், குறைந்த செலவில் உலகளாவிய பயனர்களையும் ஈர்த்து வருகின்றன. ஏஐ துறையில் ஒரு நாட்டின் ஆதிக்கம் மட்டுமே இருக்கக்கூடாது. சீனாவில் நாங்கள் அடிக்கடி சொல்வதுண்டு: ஒற்றை நரம்பால் இசையை உருவாக்க முடியாது.
அதேபோல், ஒரு மரம் மட்டும் காடாகாது. ஏஐ தொழில்நுட்ப துறையில் மேம்பாடு என்பது ஒரு நாடு மட்டும் தனித்துச் செயல்படும் விஷயமாக இருக்கக்கூடாது; மாறாக, அது சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய ஒரு கூட்டு முயற்சியாக அமைய வேண்டும். தொழில்நுட்ப மேம்பாட்டில் மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்திலும் முன்னிலை வகிக்க சீனா முயற்சித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையானது முறைப்படுத்தப்பட வேண்டும்.
ஏஐ தொழில்நுட்பம் மனிதகுலத்தின் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பயனுள்ள விதிமுறைகளை வகுக்க வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் ஏஐ தொழில்நுட்பத்தில் தனி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதைத் தவிர்த்து, உலக நாடுகள் அனைத்தும் சமமாகப் பயனடையும் வகையில் வெளிப்படையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க சீனா தயாராக இருக்கிறது. இவ்வாறு ஷி ஜின்பிங் பேசினார்.
மேலும்
-
நாகாலாந்தில் நிலச்சரிவு: 8 பேர் உயிரிழப்பு
-
சாலை மோசம்
-
கர்ப்பபை வாய் புற்று நோய் தடுப்பூசி
-
நவசக்தி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா 6ம் தேதி துவக்கம்
-
மனிதவள வட்டாரத்தின் மாதாந்திர கூட்டம்: தொழில் சட்டங்களுக்கு அதிகாரிகள் விளக்கம்
-
காரைக்குடி பகுதி எல்கையில் காட்சி பொருளாக சோதனை சாவடி: அரிசி கடத்தல், டூவீலர் திருட்டு அதிகரிப்பு