சென்னை -பெங்களூரு இடையே புல்லட் ரயில்: ரூ.18 ஆயிரம் கோடி திட்டத்திற்கு டெண்டர்
சென்னை: சென்னையில் இருந்து பெங்களூருக்கு, புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த, 'டெண்டர்' வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு வரை, புல்லட் ரயில் திட்டப்பணிகள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு, 'டெண்டர்' வெளியிடப்பட்டுள்ளது. தேசிய அதிவேக ரயில் கழகம் வெளியிட்டுள்ள, புதிய டெண்டரின்படி, ஒப்பந்ததாரர் இத்திட்டத்தின் திருத்தப்பட்ட, புதிய வழித்தட வரைபடத்தின் அடிப்படையில், பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மொத்தம், 306 கி.மீ., துாரம் உடைய, இந்த அதிவேக வழித்தடத்தில், சென்ட்ரல், பூந்தமல்லி, அரக்கோணம், ஆந்திர மாநிலம் சித்துார், கர்நாடகா மாநிலம் கோலார், கொடிஹள்ளி, ஒயிட்பீல்டு மற்றும் பெங்களூரு என, எட்டு முக்கிய ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் பரந்துாரில் அமையவுள்ள, புதிய விமான நிலைய இணைப்புக்காக, பரந்துார் தற்போதைக்கு, 'எதிர்கால நிலையமாக' இருக்கும்.
மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் இயங்கக்கூடிய, இந்த புல்லட் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும் போது, சென்னை மற்றும் பெங்களூரு இடையிலான பயண நேரம், ஏழு மணி நேரத்தில் இருந்து 73 நிமிடங்களாக குறையும் என, எதிர்பார்க்கிறோம். சென்னையின் முதல் புல்லட் ரயில் நிலையம், சென்னை புறநகர் ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் அமைக்கப்படும்.
அது சென்னை சென்ட்ரல் மற்றும் மெட்ரோ நிலையங்களுடன் முறையே 100 மீட்டர் மற்றும் 50 மீட்டர் நீளமுள்ள இணைப்புகள் வாயிலாக, இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 306 கி.மீ., வழித்தடத்தில், 28 கி.மீ., துாரம் நிலத்தடி சுரங்கப்பாதையாக அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை வரும் 2035க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு, 18,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பரந்தூரில் விமானநிலையம் அமைக்க முடியாதுன்னு தூய ஆட்சி சொல்லீடிச்சே. அப்புறம் எப்படி?
அகமதாபாத் மும்பை புல்லட் ரயில் திட்டத்தின் புதிய மதிப்பீடு கிமீ 400 கோடி. இது அதன் ஆரம்ப திட்டமதிப்பீட்டை விட 2 மடங்கு அதிகமாக உள்ளது.
கிட்டத்தட்ட 59% திட்ட வேலைகள் முடிந்து உள்ளது என்று கூறப்படுகிறது. மீதமுள்ள 40% முடிவதற்குள் இன்னும் ஒரு மடங்கு அதிகமாக வாய்ப்புள்ளது.
திட்டம் இந்த அரசாங்கம் மூலம் நிறைவேற்றப்பட்டால் ஒருலட்சம் கோடியில் முடிவடைய வாய்ப்புகள் அதிகம்
165.5 கிமீ நீளமே உள்ள டில்லி நொய்டா ஆக்ரா நெடுஞ்சாலைக்கு 13,500 கோடி ரூபாய் செலவாகி உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை போல 2 1/2 இரண்டரை மடங்கு தூரம், எட்டு ஸ்டேஷன், அதில் பரந்தூர் இன்னும் இடமே கையகப்படுத்தவில்லை. ஆனால் இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு வெறும் 18,000 கோடி மட்டுமே தான் என்பதில் இருந்து அது வெறும் வாய்ல சுட்ட வடை தான் என்று தெரிகிறது. இதை சொன்னா அறிவாளிங்க கடிச்சி குதற வருஙானுங்க.
ஒட்டக பயணியிடம் மல்லுக்கட்ட தேவையில்லை
ஏவா வேலு என்றால் சாலை போடாமலேயே ஏப்பம் விட்டு விடுவார்...
உங்களுக்கு தான் தரவுகளுடன் பேச பிடிக்காதே. வாய்லே வடை சுடத்தானே தெரியும். புல்லட் ரயில் திட்டத்திற்கான முதலீடு குறைந்த வட்டியில், அதற்கான திட்டவடிவமைப்பு, முக்கிய பாகங்கள், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான உதவிகளையும் செய்து வந்த ஜப்பான் நாட்டுடன் இன்று மல்லுக்கட்டி வருகிறது இந்திய அரசு.
இந்த அமைச்சரை குறை கூறும் நபர் கூமுட்டை
ohhh
வாழ்த்துக்கள். கூடவே ஒரு விண்ணப்பம், கணிவான விண்ணப்பம்: இப்பொழுது இயங்கும் ரயில்களை நேரம் தவறாமல் இயக்க முயலுங்கள். ரயில்பெட்டிகளை மற்றும் ரயில்வே நிலையங்களை சுத்தமாக வைக்க முயலுங்கள்.
பயணத்தின்போது கொடுக்கப்படும் உணவின் தரத்தை உயர்த்துங்கள். பயணத்தின்போது மொபைல் பேசும், மொபைல் போனில் சத்தமாக வீடியோக்கள் பார்க்கும்,
சத்தமாக பேசிகொண்டுவரும் பயணிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுங்கள். நன்றி.
நீங்க விஜய் மாதிரி விமானம் வாடகைக்கு எடுத்து பயணம் பண்ணுங்க ... கமல் நடித்த படம் ஒன்றில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தூக்கம் வராமல் தவிப்பார் ..பக்கத்துக்கு சினிமா தியேட்டரில் சத்தங்களை ரிக்கார்ட் பண்ணி ஓட்டலில் படுக்கும்போது ஒலிக்கவிட்டு குறட்டை விட்டு தூங்குவார்
நயன்தாரா அல்லது த்ரிஷா மாதிரி நடிகைகள் தான் விமானத்தில் செய்து காட்டும் பாதுகாப்பு விதிமுறைகளை புல்லட் ரெயிலில் செய்து காட்டணும்னு சொல்லாம விட்டாரே
சென்னைக்கு லோக்கல் ரயிலே போடும் . புல்லட் எதுக்கு , வேண்டாம் , அந்த பணத்தை உத்தர பிரதேசத்துக்கு கொடுத்திரலாம் .
ஷேர் ஆட்டோ போதுமே
இந்தியன் அருமை அருமை
அலகாபாத் காசியிலே ஒரு லட்சத்துக்கு மேல் தமிழர்கள் வசிக்கிறார்கள் ...பீச்லேந்து கிண்டி வரைக்கும் அஞ்சு ரூபாயில் தான் பயணிக்கணும் என்றால் லோக்கல் போதும்
டிக்கெட் வாங்காமல் பயணிக்க முடியுமா??
இதே போல புல்லட் ரயில்கள் சுமார் எழுபது வருடங்களுக்கு முன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்....
ஏன் இனிமேல் பெங்களூரு போக மாட்டிங்களாமேலும்
-
கிரீன் மாரத்தான் போட்டி 500 பேர் பங்கேற்பு
-
கன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
-
தோட்டக்கலைத் துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
-
தனியார் நிறுவனம் ரூ.1,109 கோடி மோசடி: பல இடங்களில் சி.பி.ஐ., அதிரடி சோதனை
-
கொக்கிலமேடில் 8 குடும்பங்கள் பாதுகாப்பு கோரி போலீசில் மனு
-
வனப்பகுதியில் குப்பை கழிவுகள் விலங்குகளுக்கு நோய் அபாயம்