கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் ரூ.7 .5 லட்சம் லஞ்சத்தொகை பரிமாற்றம்; சோதனையில் அம்பலம்
கோவை: கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய அதிரடி சோதனையில், ஆன்லைன் வழியாக ரூ.7.5 லட்சம் ரூபாய் லஞ்சத் தொகை பரிமாற்றம் செய்துள்ளது தெரிந்தது. மேலும், ரொக்கமாக ரூ. 5 ஆயிரம் சிக்கியது.
கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு தாசில்தார் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., ராஜேஷ் தலைமையில் குழுவினர் நேற்று மாலை, 4:30 மணியளவில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.அலுவலக அறைகள் மட்டுமின்றி, பார்க்கிங்கில் நின்று இருந்த அலுவலர்களின் வாகனங்களிலும் சோதனை செய்தனர். அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் விசாரித்தனர். தொடர்ந்து, பெண் அலுவலர்கள், பொதுமக்கள் முழுமையான சோதனைக்கு பின், 7:30 மணிக்கு வெளியில் அனுப்பப்பட்டனர்.
லஞ்ச பணம் பெரும்பாலும் ஆன்லைன் வழியாக பெறப்பட்டதை கண்டறிந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அனைத்து ஊழியர்களின், ஆன்லைன் செயலிகளை ஆய்வு செய்தனர். அதில், லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ரொக்கமாக ரூ.5 ஆயிரம் சிக்கியது. இரவு, 10: 00 மணியை கடந்தும் சோதனை நடந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., ராஜேஷ் கூறுகையில், ''துணை தாசில்தார், ஆர்.ஐ., வி.ஏ.ஓ., இன்ஜினியர், உதவியாளர் வங்கி கணக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது, ரூ.7.5 லட்சம் லஞ்சத் தொகை பரிமாற்றம் செய்துள்ளது தெரிந்தது'' என்றார்.
இடை தேர்தல் வரை இது மாதிரி ய்திகள் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
மின்சாரவாரியமும் , வருவாய்த்துறை , போக்குவரத்து துறை , தொழிற்சாலைகள் ஆய்வாளர்கள் முழுமையாக கண்காணிக்க படவேண்டும் . தி மு க எனும் நச்சு கிருமிகளால் வளர்க்கப்பட்ட ஜந்துக்களை அழிக்க வேண்டும் .
என்ன நடவடிக்கை எடுத்தார்கள். டிஸ்மிஸ் செய்ய முடியுமா. இரண்டு நாட்கள் பிறகு மறுபடியும் ஆரம்பித்து விடுவார்கள்.
மிக அதிகமாக அனுதினம் நடக்கக்கூடிய லஞ்சப் பரிமாற்றங்கள், தாசில்தார் அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள், மாநில எல்லை டோல் கேட்கள்,
பிறப்பு இறப்பு சான்று கொடுக்கும் அலுவலகங்கள். இந்த அலுவலகங்களிலுள்ள பணியார்களை சொத்து விபரங்களை ஆய்வு செய்தாலே உண்மை புரியும்.
தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் அரசியல் அலுவலர்களிடமிருந்து வசூலாகும் லஞ்சம் பணமே அரசுக்கு நல்ல வருமானம் ஆகும் போலிருக்கிறதே இந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் பணம் உபரியாகவே இருக்கும் போலிருக்கிறதே எல்லாமே முதல்வர் விஜய்யின் ஆட்சி திறமைதான்
யாரும் ஒண்ணும் செய்ய முடியாது. எல்லாம் ரத்தத்தில் ஊறி விட்டதுமேலும்
-
காஸ் லாரி மீது கார் மோதி விபத்து; மூன்று பேர் பலி
-
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்; நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு; இன்றைய நிலவரம் இதோ!
-
பழநி மடம் நிலம் மோசடி வழக்கு: தொடர்புடையவர்கள் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள் சல்லடை
-
பயிர்க்காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு
-
தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்க உறுதியேற்போம்; முதல்வர் விஜய்