வெயில், மழையில் அவதிப்படுவதால் நிழற்குடையை எதிர்பார்க்கும் பயணியர்
திருப்போரூர்: கேளம்பாக்கம் காவல் நிலைய பேருந்து நிறுத்தத்தில், வெயில், மழைக்காலத்தில் அவதிப்படுவதால், நிழற்குடை அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேளம்பாக்கம் ஊராட்சி சென்னைக்கு அருகாமையில் அமைந் துள்ள புறநகர் பகுதி. இங்கு 15,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஓ.எம்.ஆர்., சாலை, தையூர் ஊராட்சி எல்லையில் உள்ள கேளம்பாக்கம் காவல் நிலையம் அருகே, பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்த நிறுத்தம் வழியாக தாம்பரம், கிளாம்பாக்கம், பிராட்வே, சென்ட்ரல், கோயம்பேடு, தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு 200க் கும் மேற்பட்ட பேருந்துகள் சென்று வருகின்றன.
கேளம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர், இந்த நிறுத்தத்தில் காத்திருந்து பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
ஆனால் நிழற்குடை இல்லாததால் வெயில், மழையில் காத்திருந்து பயணியர் சிரமப்படுகின்றனர். எனவே, கேளம்பாக்கத்தில் நிழற்குடை அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும்
-
ஏஐ துறையில் ஒரு நாட்டின் ஆதிக்கம் மட்டுமே இருக்கக்கூடாது; சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்
-
சென்னை -பெங்களூரு இடையே புல்லட் ரயில்: ரூ.18 ஆயிரம் கோடி திட்டத்திற்கு டெண்டர்
-
கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் ரூ.7 .5 லட்சம் லஞ்சத்தொகை பரிமாற்றம்; சோதனையில் அம்பலம்
-
தொடந்து நீடிக்கும் அமெரிக்கத் தாக்குதல்கள்; ஈரான் கடும் எச்சரிக்கை
-
சிறிய வீடு கட்ட பிரீகாஸ்ட் கட்டுமான முறை உகந்ததா?
-
சுவர்களில் ஈரம்...அலர்ஜி ஏற்படுத்தும்! ஆரம்பத்திலேயே தடுப்பது கட்டடத்துக்கும் நலம்