ஸ்ரீபெரும்புதுாரில் பூங்காவை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், பராமரிப்பு இல்லாமல் உள்ள பூங்கவை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் சாலை, பட்டுநுால்சத்திரம் பகுதியில், ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையமும் உள்ளன.

இங்கு வருவோரின் வசதிக்காக இருக்கை வசதியுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா பராமரிப்பு இல்லாததால், இருக்கைகள் சேதமடைந்து, செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால், பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பூங்காவை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement