தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கைக்கு 20ம் தேதி முகாம்

விழுப்புரம்: மாவட்ட அளவிலான தொழிற்பழகுநராக பயிற்சி சேர்க்கைக்கு வரும் 20ம் தேதி முகாம் நடக்கிறது.

கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்ய மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் வரும் 20ம் தேதி காலை 9:30 மணி முதல் நடக்கிறது.

முகாமில், மாவட்டத்தில் உள்ள தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள், கனரக வாகன தொழிற்சாலை மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் ஒரே இடத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 1000க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.

என்.சி.வி.டி., மற்றும் நேரடியாக தொழிற் சாலைகளில் பிரஷ்ஷர் அப்ரண்டிசாக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.

இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை 9,600 முதல் 12,000 ரூபாய் வரை நிறுவனத்தால் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 04146 294989 என்ற தொலைபேசியிலோ மற்றும் மண்டல பயிற்சி இணை இயக்குநரை 04146 290673 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement