பொது இடத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் மூவரை தாக்கிய கல்லுாரி மாணவர் கைது
குளித்தலை:கரூர்
மாவட்டம், குளித்தலை அடுத்த மேலகுட்டப்பட்டியை சேர்ந்தவர்
மாரிமுத்து, 46. இவர் கடந்த 15ம் தேதி இரவு, 10:00 மணியளவில் பகவதி
அம்மன் கோவில் முன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அதே ஊரை சேர்ந்த
சிப்காட்டில் வேலை செய்யும் சதீஷ், 19, கல்லுாரி மாணவர் யோகேஷ், 19,
மற்றும் நண்பர்கள் தினகரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், சதீஷ்
பிறந்தநாளை, இருசக்கர வாகனத்தை சாலையில் வைத்து கேக் வெட்டி
கொண்டாடினர். பின்னர் வாகனங்களின் சைலன்சர்களை கழற்றி விட்டு, அதிக
சத்தத்துடன் தொடர்ந்து பட்டாசு வைத்து கொண்டாடினர்.இதை
மாரிமுத்து, அவரது சித்தப்பா சேட்டு, மாரிமுத்து தம்பி மனைவி வசந்தி
ஆகியோர், 'இரவு நேரத்தில் இப்படி தொந்தரவு செய்யலாமா' என கேட்டனர்.
அதற்கு, வாலிபர்கள் தகாத வார்த்தையால் திட்டி, கைகளாலும், கல்லாலும்
அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். பாதிக்கப்பட்ட மாரிமுத்து, சேட்டு
ஆகியோர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
மாரிமுத்து கொடுத்த புகாரின்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து, கல்லுாரி மாணவன் யோகேைஷ கைது செய்தனர். மற்ற மூவர்
தலைமறைவாக உள்ளனர்.