கல்வி வளர்ச்சி நாள் விழா

கரூர்:தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளமதி தலைமை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணம் முடிப்பும், கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. பல்வேறு கலை நிகழ்ச்சி நடந்தது.
விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர்
பரணிதரன், புலியூர் டவுன் பஞ்., கவுன்சிலர்கள் தங்கமணி, கண்ணன், பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவர்
பூங்கோதை உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement