பெண் குழந்தைகளை காக்க வலியுறுத்தி விளையாட்டு

கரூர்:கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பெண் குழந்தைகளை காப்போம் என வலியுறுத்தி விளையாட்டு போட்டி நடந்தது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எஸ்.ஐ., பிரியதர்ஷினி போட்டியை தொடங்கி வைத்தார்.

தடகளம், கையுந்து பந்து, இறகுப்பந்து, சிலம்பம் ஆகிய போட்டிகள் நடந்தன. மேலும் தடகளத்தில், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஒட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும் நடந்தன. 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

Advertisement