மனிதவள வட்டாரத்தின் மாதாந்திர கூட்டம்: தொழில் சட்டங்களுக்கு அதிகாரிகள் விளக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி மனிதவள வட்டாரத்தின் 110-வது மாதாந்திர கூட்டம் அண்ணா சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
புதுச்சேரி தொழிலாளர் துறை கொதிகலன் ஆய்வாளர் முரளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிட நிலைமைகள் சட்டம் செயல்படுத்தும் பார்வை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மேலும், மனிதவள வட்டாரத்தின் முன்னாள் தலைவர் டக்லி டக்லஸ் மற்றும் இ.எஸ்.ஐ., முன்னாள் துணை இயக்குநர் சங்கரலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
சிறப்பு அமர்வுகளில் தொழில் நிறுவனங்களின் சட்டப்பூர்வ பொறுப்புகள், பணியாளர்களின் நலன், விபத்துகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
கலந்துரையாடலில் பங்கேற்ற மனிதவள அதிகாரிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொழில் சட்டம் தொடர்பான தங்களுக்கு எழுந்த சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றனர்.
மனிதவள வட்டாரத்தின் தலைவர் புவனேஸ்வரி, துணை தலைவர் கிருஷ்ணராஜ், செயலாளர் சாய் அருண், பொருளாளர் ரோஜி, இணைச் செயலாளர் பரத் சத்யா மற்றும் இணைப் பொருளாளர் ஜான்சி உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது
மேலும்
-
சட்ட விரோதமாக மண் அள்ளும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?
-
விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி
-
பார்லி மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாளே எதிர்க்கட்சிகள் அமளி; இரு அவைகளும் ஒத்திவைப்பு
-
மஹாராஷ்டிராவில் கார் மீது டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி
-
அதிக இளம் கிராண்ட் மாஸ்டர்கள் கொண்ட தமிழகம்: முதல்வர் விஜய் பெருமிதம்
-
பதவி பறிபோன திமுக விஐபி அமைச்சரை சந்திக்க வந்தது ஏன்?