கர்ப்பபை வாய் புற்று நோய் தடுப்பூசி

புதுச்சேரி: சுகாதாரத் துறை மூலம், பெண் குழந்தைகளுக்கு கர்ப்பபை வாய் புற்று நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சுகாதார துறை சார்பில் 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு கர்ப்பபை வாய் புற்று நோய் தடுப்பூசி போட இரண்டு நாள் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கடந்த 12ம் தேதி முதல் நாள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து விடுபட்டவர்களுக்கு இரண்டாவது நாளாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டது. இதில், 14 வயதுடைய பெண் குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Advertisement