நவசக்தி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா 6ம் தேதி துவக்கம்

புதுச்சேரி: திலகர் நகர் நவசக்தி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா வரும் 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

புதுச்சேரி, திலகர் நகர்(பேட்டையான்சத்திரம்) நவசக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 25ம் ஆண்டு ஆடித்திருவிழா வரும் 6ம் தேதி மாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

தொடர்ந்து, வரும் 7ம் தேதி காலை 7:30 மணிக்கு கரக ஊர்வலம், 10 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 6 மணிக்கு கும்பம் கொட்டுதல் மற்றும் அம்மனை வர்ணித்தல் நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிவுலா நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக, வரும் 9ம் தேதி காலை 8 மணிக்கு தேர் திருவிழா, மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், தீபாராதனை நடக்கிறது. 10ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.  ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், பொதுக்குழு மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர். 

Advertisement