காரைக்குடி பகுதி எல்கையில் காட்சி பொருளாக சோதனை சாவடி: அரிசி கடத்தல், டூவீலர் திருட்டு அதிகரிப்பு
காரைக்குடி:சாக்கோட்டை, புதுவயல் உட்பட மாவட்ட எல்லை பகுதியில் கடத்தலை தடுக்க சோதனை சாவடிகள் மூலம் கண்காணிக்க அமைத்தவை காட்சி பொருளாக கிடக்கிறது.
காரைக்குடி சப்-- டிவிஷனுக்கு உட்பட்ட சாக்கோட்டை அருகே செங்கரை நான்கு ரோடு மற்றும் புதுவயல், கானாடுகாத்தான், கொத்தமங்கலம் பகுதிகள் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட எல்லை பகுதிகளாக உள்ளன. இந்த வழியாக அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆனால்,இந்த வாகனங்களை கண்காணிக்க செங்கரை நான்கு ரோடு, கொத்தமங்கலம் பகுதியில் சோதனை சாவடியே இல்லை. புதுவயல், கண்டனுார் பகுதியிலும் சோதனை சாவடிகள் காட்சி பொருளாக உள்ளன.
இந்த சூழலில் தான் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மர்ம நபர்கள் புதுவயல் பகுதியை குறிவைத்து தொடர்ந்து டூவீலர் திருட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக மினி லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வந்தபோதும், போலீசார் மற்றும் உணவு பொருள் கடத்தல் குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். எனவே சிவகங்கை எஸ்.பி., மாவட்ட எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் போதிய போலீசார், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிர வாகன சோதனைக்கு பின்னரே சிவகங்கை மாவட்டத்திற்குள் வர அனுமதிக்க வேண்டும்.
மேலும்
-
தாக்குதலை தொடரும் அமெரிக்கா; ஈரான் பயணத்தை ஒத்திவைக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
-
சாயத்தொழிலுக்கான பசுமை மையம்; திருப்பூரில் அமைக்க கோரிக்கை
-
அலுமினிய இறக்குமதி வரியை நீக்க கோரிக்கை
-
ஆர்.பி.ஐ., சொல்லியும் கடன் வட்டியை சில வங்கிகள் குறைக்காதது ஏன்?
-
சிறுதொழில்களுக்கு பிணையில்லா கடன்; நடைமுறைப்படுத்த வங்கிகள் தயக்கம்
-
தேயிலை ஏலம் ரூ.53 கோடிக்கு வர்த்தகம்